காற்று மாசுபாடு காரணமாக சுவாகக்கோளாறு, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் சென்னையில் கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் 4 ஆயிரத்து 800 பேர் பலியாகியுள்ளனர் என ஆய்வு ஒன்றின் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை கடந்த 2016-ம் ஆண்டில் டெல்லியில் 15 ஆயிரம் பேர் சுவாசக் கோளாறு உள்ளிட்ட நுரையீரல் தொடர்பான நோய்களால் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.காற்று மாசுபாட்டால், அதிகமான உயிரிழப்புகளைச் சந்திக்கும் நகரங்களில் உலக அளவில் 3-வது இடத்தில் டெல்லி இருந்துவருகிறது.
காற்றில் மாசின் அளவு பிஎம் 2.5 அதிகரிக்கும் போது, மனிதர்களுக்கு இதயநோய், சுவாச நோய்கள், புற்றுநோய், குறைந்த வயதில் திடீரென இறப்பைத் தழுவுதல் போன்றவை ஏற்படுகின்றன. அந்த வகையில் இவ்வாறு இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
அதேவேளை உலகளவில் கடந்த 2016-ம் ஆண்டில் ஷாங்காய் நகரில் 17,600 பேரும், பெய்ஜிங்கில் 18,200 பேரும் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது