மேற்கிந்திய தீவுகளுடன் நடைபெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டியின் போது, பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்காக இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால், பயிற்றுவிப்பாளர் , சந்திக ஹதுருசிங்க மற்றும முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருக்கு 4 ஒரு நாள் போட்டிகளிலும் கலந்து கொள்ள சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தடை விதித்துள்ளது
கடந்த 11ஆம் திகதி சர்வதேச கிரிக்கெட் கேட்டுப்பாட்டுசபையின் ஒழுக்காற்றுக் குழு காணொளி ஊடாக குறித்த மூவரிடமும் மேற்கொண்ட விசாரணையின் போது மூவரும் குற்றத்தை ஏற்றுக்கொண்டதற்கு இணங்க இந்த போட்டித் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.ஏற்கனவே குறித்த மூவருக்கும் 2 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ள சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது