இந்தியா முழுவதும் உள்ள குழந்தைகள் நல்வாழ்வு மையங்கள் அனைத்தும் முறையாக பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அன்னை தெரசாவால் ஆரம்பிக்கப்பட்ட மிஷனரிஸ் ஒப் சரிற்றி நிறுவனம், ஜார்கண்ட் மாநிலத்தில் நடத்தி வரும் குழந்தைகள் மையமானது தத்தெடுப்பு என்ற பெயரில் 3 குழந்தைகளை பணத்துக்கு விற்றதாக குற்றசாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் அவர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
மேலும் குழந்தைகள் தத்தெடுப்புக்கென தேசிய அளவில் செயல்படும் உயரிய அமைப்பான காராவில் அனைத்து மையங்களும் ஒரு மாதத்துக்குள் இணைக்கப்பட வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
குழந்தைகள் நல்வாழ்வு மையங்களை பதிவு செய்ய வேண்டுமென உத்தரவு
224
Spread the love