இந்தியாவில் வெறுக்கத்தக்க வகையில் தலித், சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல் அதிகரித்து உள்ளதாக சர்வதேச மன்னப்பபுச்சபை குற்றம் சுமத்தியுள்ளது
இந்தியா முழுவதும் தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மை மக்கள் போன்றவர்கள் மீது பரவலாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றதாகவும் அதில், சில தாக்குதல்கள் அவர்களை கடுமையாக அவமதிக்கும் வகையிலும், கீழ்த்தரமாக நடத்தும் வகையிலும் வெறுக்கத்தக்க வகையில் இடம்பெறுவதாகவும் சர்வதேச மன்னப்பபுச்சபை தெரிவித்துள்ளது
2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரபிரதேச மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி முகமது அக்லக் என்பவர் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து இது போன்ற வெறுக்கத்தக்க தாக்குதல்கள் எந்த அளவுக்கு நடைபெறுகிறது என்பது குறித்து சர்வதேச மன்னப்பபுச்சபை மேற்கொண்ட கணக்கெடுப்பில் 2015 செப்டம்பருக்கு பின்னர் இதுவரை 603 வெறுக்கத்தக்க குற்றங்கள் நடந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் முதல் 6 மாதத்தில் மட்டும் 100 குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அதில், உத்தரபிரதேசத்தில் தான் அதிக குற்றங்கள் ந இடம்பெற்றுள்ளதாகவும் கூட்டிக்காட்டப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 18 குற்றங்கள் நடந்துள்ளன. குஜராத்தில் 13 குற்றங்களும், ராஜஸ்தானில் 8 குற்றங்களும், தமிழ்நாடு, பீகாரில் தலா 7 குற்றங்களும் நடந்துள்ளன.
இந்தியாவில் இவ்வாறு இடம்பெற்ற பல குற்றங்களையும் சுட்டிக்காட்டி சர்வதேச மன்னப்பபுச்சபை தனது இணைய தளத்தில் தகவல்களை வெளியிட்டுள்ளது.