குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஆடி பிறப்பில் தமிழர் நாம் கூடி கொண்டாடிக் குதூகலிப்போம் என்ற தொனிப்பொருளில் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அணுசரணையில் மன்னார் மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பில் இன்று செவ்வாய்கிழமை (17) மன்னார் மாவட்ட செயலகத்தில் காலை 8.45 மணியளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்.சி.ஏ.மோகன்ராஜ் தலைமையில் ஆடி பிறப்பு கொண்டாட்ட நிகழ்வு இடம் பெற்றது.
புகழ் பெற்ற நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் படத்திற்கு மாலை அணிவித்தலுடன் ஆரம்பமான நிகழ்வில் தமிழர்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பல்வோறு கலை நிகழ்வுகள் மற்றும் பேச்சு பாடல்கள் இடம் பெற்றது.
குறித்த நிகழ்விற்கு விருந்தினர்களாக மன்னார் வலயகல்வி பணிமனை சார்பாகவும் மடு வலயகல்விபணிமனை சார்பாகவும் பிரதி கல்வி பணிப்பாளர்களும் கலந்து சிறப்பித்தனர் . அவர்களுடன் மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் , கணக்காளர் பதவி நிலை உத்தியோகத்தர்கள் நிர்வாக அலுவலர்கள் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் பங்கு பற்றிய அனைவருக்கும் பாரம்பரிய முறைப்படி சிரட்டையில் ஆடி கூழானது வழங்கிவைக்கப்பட்டது.
அதன் பின்னர் மன்னார் பேரூந்து நிலையத்தில் பொது மக்களுக்கும் சிரட்டையில் ஆடி கூலானது வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.