இங்கிலாந்து – இந்தியா இடையிலான 3-வதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இன்றையதினம் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக் இழப்பிற்கு 256 ஓட்டங்களைப் பெற்றது.
இதனையடுத்து 257 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுக்களை மட்டும் இழந்த நிலையில் இலக்கை அடைந்து வெற்றியடைந்து தொடரை கைப்பற்றியது.
அடுத்த வருடம் இங்கிலாந்தில் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில், இந்த தொடருடன் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக 8 தொடர்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.