தங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்காவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்திருப்பதாகவும் சட்ட ரீதியாக அமெரிக்காவை எதிர்க் கொள்ள உள்ளதாகவும் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது
கடந்த 2015-ம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
அதில் அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்றும் அணு ஆயுத தயாரிப்புக்கு பயன்படுத்த மாட்டோம் என்றும் ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகள் அமெரிக்காவால் நீக்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த மே மாதத்தில் இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக் அறிவித்த ட்ரம்ப ஈராக் மீது பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தார்.
இந்தநிலையில் தற்போது ஈரான் சர்வதேச நீதிமன்ற உதவியை நாடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது