ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வரும் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என அமெரிக்கா அறிவித்துள்ளது. கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தான் இராணுவத்தினருடன் தலிபான்கள் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வரு கின்றநிலையில் அங்கு 15,000 அமெரிக்க ராணுவத்தினர் தங்கியிருந்து அந்நாட்டு ராணுவத்தினருக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.
உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவரு வருவதற்காக முயற்சி செய்து வருகின்ற ஜனாதிபதி அஷ்ரப் கனி தலிபான்களை அரசியல் கட்சியாக அங்கீகரிக்க தயார் எனவும் அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் தலிபான் களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக உள்ளதாகவும் இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் அரசுடனும் ஆலோசனை நடத்தி வருகிறோம் எனவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் ஆப்கானிஸ்தான் அரசு, தலிபான் கள் இடையே நேரடி பேச்சு வார்த்தை நடத்தப்படுவதையே அமெரிக்கா விரும்புகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை அமெரிக்காவின் கறுப்பு பட்டியலில் இருந்து தலிபான்களின் பெயரை நீக்க வேண்டும் எனவும் கட்டாரில் அரசியல் அலுவலகம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் போன்ற நிபந்தனைகளை தலிபான்கள் முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது