பெருவில் போதைப் பொருளை கடத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் தடுக்க 60 நாள் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. பெருவில் அயல் நாடான கொலம்பியாவில் இருந்து பலர் எல்லை தாண்டி நுழைகின்ற நிலையில் அவர்கள் மூலம் போதை பொருள் கடத்தப்படுவதால் அந்நாட்டில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
இதனால் அந்நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளமையினால் அதனைத் தடுக்காப்பதற்காக பெரு மற்றும் கொலம்பியா எல்லையில் உள்ள அமேஷோனியன் மாகாணத்தில் 60 அவசர நிலை பெரு ஜனாதிபதி மார்டின் விஷ்காராவினால் பிரகடனபபடுதத்பட்டுள்ளது.
ராணுவ வீரர்கள் உதவியுடன் காவல்துiயினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். போதை பொருள் கடத்தல்காரர்கள் ஊடுருவலை கண்காணிக்க 5 ஹெலிகொப்டர்கள், 3 விமானங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது