253
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி கல்மடுகுளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த 63 வயதுடைய சுந்தரம் புலேந்திரன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று(17) தொழிலுக்கு சென்ற போது காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தர்மபுரம் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில் இன்று(18) காலை கல்மடு குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தர்மபுரம் காவல்துறையினர்; மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
Spread the love