அமெரிக்கா கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் சம்பியன் பட்டம் பெறுபவருக்கு தலா 3.8 மில்லியன் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டென்னிஸ் தொடரில் மிகவும் உயர்ந்த தொடராக கருதப்படும் 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்கா ஓபன் தொடர் அடுத்தமாதம் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இவ்வாறு பரிசத்தொகை அறிவி;கப்பட்டுள்ளது.
அந்தவகையில் 3.8 மில்லியன் அமெரிக்கா டொலர் பரிசுத் தொகை ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு சம்பியனுக்கு வழங்கப்படும் என அமெரிக்கா டென்னிஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.அதேபோல் இரட்டையர் பிரிவில் வெல்லும் ஜோடிக்கு 7 லட்சம் டொலர் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டிற்குப் பின்னர் பரிசுத்தொகை 57 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.