துருக்கியில் இரண்டு ஆண்டுகளாக அமுலில் இருந்த அவசர காலச்சட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 2016ல் இடம்பெற்ற ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்ட பின் அங்கு அவசர காலச்சட்டம் பிரகடனம் செய்யப்பட்டதுடன் இந்தச் சட்டத்தின் க் கீழ் பல்லாயிரம் பேர் கைது செய்யப்பட்டதுடன் பலர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். ஏழு முறை நீடிக்கப்பட்ட இந்த அவசர காலச்சட்டமானது அந்நாட்டு ஜனாதிபதி ரையிப் எர்டோகன் ( Tayyip Erdogan ) மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றதனையடுத்து தற்போது அவசர கால சட்டத்தினை நீடிக்க வேண்டியதில்லை என என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த அவசரகாலச் சட்டம் பிரகடனப்பட்டதிலிருந்து துருக்கியில் 1.07 லட்சம் பேர் அரச பணிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்; என்பதுடன் சுமார் 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் வழக்குகள் தொடர்ந்தும் நிலுவையில் உள்ளன. 2016 ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின்போது ராணுவ விமானங்கள் நாடாளுமன்றக் கட்டடத்தின் மீது குண்டுவீசியதில் 250 பேர் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.