குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
மத்தள விமான நிலையத்தை இந்திய நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்குவது சம்பந்தமாக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை வர்த்தக கொடுக்கல், வாங்கல் மட்டுமே என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அமைச்சர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், மத்தள விமான நிலையம் சம்பந்தமான உடன்டிக்கையை, அமைச்சரவை, சட்டமா அதிபர் மற்றும் நாடாளுமன்றத்திற்கும் சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.