இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஸ் நாடுகளை சேர்ந்த 13 பேர் போலந்தின் எல்லைப்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த நபர்கள் எவ்வித ஆவணங்களுமன்றி எல்லையைக் கடக்க முற்பட்ட போது எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உக்ரைன் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரiணைகளின் போது சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஆட்களை கடத்தும் 5 இலங்கையர்கள் குறித்த தகவல்கள் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 13 பேரும் உக்ரைன் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து அவர்களுக்கெதிரான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.