தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி பார்க் குன்-ஹே (Park Geun-hye) க்கு மேலும் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் முறைகேடுகள் செய்த குற்றத்துக்காக பார்க் குன்-ஹேக்கு மேலும் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறதென தென்கொரிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஏற்கெனவே ஊழல் குற்றத்துக்காக பார்க்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தநிலையில் மேலும் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
66 வயதான பார்க் குன்-ஹே தென்கொரியாவில் ஜனாதிபதியான இருந்த போது பெரும் ஊழல் செய்து பல கோடி ரூபாய் சொத்து சேர்த்த குற்றச்சாட்டு தொடர்பில் அவரது தோழி சோய் சூன் சூலுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் ஏற்கெனவே விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது