சிங்கப்பூரில் 15 லட்சம் மக்களின் தனிப்பட்ட தரவுகள் இணையத்திருடர்களால் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அந்நாட்டு மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் சுகாதார தரவுதளத்தில் ஊடுருவிய இணையத்திருடர்கள் நன்கு திட்டமிட்டு தரவுகளை திருடியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் விடுத்துள அரசாங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த மே மாதம் முதலாம் திகதியிலிருந்து இருந்து ஜூலை நான்காம் திகதிவரை மருத்துவமனைகளுக்கு சென்றவர்களின் தரவுகளே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுபெயர்கள், முகவரிகள் என்பவற்றுடன் மருத்துவ ஆவணங்கள், நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்ட மருந்துகள் உட்பட பல தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நோயாளிகளின் மருத்துவ ஆவணங்கள் மருத்துவ பரிசோதனை முடிவுகள், மருத்துவரின் குறிப்புகள் குறித்த பதிவுகள் எதுவும் நீக்கப்படவோ, திருத்தப்படவோ இல்லை எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருமுறை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிங்கப்பூர் பிரதமர் லி சியாங் லூங்கின் தரவுகள், அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்துகள் குறித்த தரவுகள் மீண்டும் மீண்டும் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.