பாகிஸ்தானில் தேர்தல் பிரசாரத்தின் போது நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலின் பிரதான செயற்பாட்டாளராக கருதப்பட்ட தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் எதிர்வரும் 25ம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளநிலையில் பலுசிஸ்தான் அவாமி கட்சியின் பேரணியை இலக்கு வைத்து கடந்த 13-ம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 149 பேர் கொல்லப்பட்டதுடன் 200க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர்.
இந்த தற்கொலைப்படை தாக்குதலை ஹபீஸ் நாவாஸ் எனும் தீவிரவாதியே மேற்கொண்டதாகவும் , அதற்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய ஹிதயத்துல்லா என்பவரே பிரதானமாக செயற்பாட்டாளராக செயல்பட்டதும் விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், வீடு ஒன்றில் பதுங்கியிருந்த ஹிதயத்துல்லாவை பாகிஸ்தான் பாதுகாப்புப்படையினர் சுட்டு கொன்றுவிட்டதாக அந்நாட்டு ராணுவத்தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.