படங்கள் இணைப்பு – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
நிதி அமைச்சின் 185 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட கிளிநொச்சி தானியக் களுஞ்சியசாலை இன்றையதினம் (21) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
மாவட்ட விவசாயிகளின் முன்னேற்றம் கருத்தி அமைக்கப்பட்ட இக் களஞ்சியசாலையில் நெல்லை களஞ்சியப்படுத்திய விவசாயிகள் மூவருக்கு பிரதமர் அதற்கான சிட்டையையும் வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியூதீன், இராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரட்ன, பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் அமைச்சுகளின் செயலாளர்கள், மாவட்ட அரச அதிபர் பிரதேச சபை உறுப்பினர்கள், விவசாயிகள் பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.