பங்காளதேஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமானுக்கு ஐ.பி.எல். உள்ளிட்ட வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு பங்காளதேஸ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை 2 வருடங்களுக்கு தடை விதித்துள்ளது. கடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய போது காயம் அடைந்தனால் அவர் அண்மையில் இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெறவில்லை. அந்த தொடரை பங்காளதேஸ் அணி 0-2 என்ற கணக்கில் இழந்தது.
20 ஓவர் லீக் போட்டியில் விளையாடி காயம் அடைந்ததால் நாட்டு அணிக்காக முஸ்தாபிஜூர் ரகுமான் விளையாட முடியாமல் போனதால் அவருக்கு இந்த தடைவிதிக்கப்படுவதாக பங்காளதேஸ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை தெரிவித்துள்ளது