குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
செம்மணி பகுதியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் சி.சதிஸ்தரன் நேற்றைய தினம் சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.
செம்மணி பகுதியில் நீர்த்தாங்கி அமைப்பதாக மண் அகழ்ந்த போது நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டன. அது தொடர்பில் காவற்துறையினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் நீதிவான் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.
அதன் போது எழும்புக்கூட்டின் சில பாகங்களே தற்போது காணப்படுவதனால், அகழப்பட்ட மண்ணுக்குள் ஏனைய எச்சங்கள் இருக்கலாம் எனும் அடிப்படையில் அந்த மண்ணை பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டார். அத்துடன் எலும்புக்கூட்டு எச்சங்கள். மீட்கப்பட்ட பகுதி தவிர்ந்த ஏனைய இடங்களில் நீர்த்தாங்கி அமைக்கும் பணிகளை மேற்கொள்ள நீதிவான் அனுமதித்தார். அதேவேளை எழும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் காவற்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.