158
ஜப்பானில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக சுமார் 30 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் அதிக வெப்பம் காரணமாக பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மத்திய ஜப்பானில் வெப்ப அளவு 40.7 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மாதத்தின் ஆரம்பத்தில் மத்திய மற்றும் மேற்கு ஜப்பானில் பெய்த கனமழையின் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love