குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
சரியான தலைமைத்துவம் இல்லாத காரணத்தினால் நாட்டில் பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் சபாநாயகரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரருமான சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மாத்தறை தெளிஜ்ஜவில பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். சரியானதும் வலுவானதுமான தலைமைத்துவம் இருந்த காரணத்தினாலேயே 30 வருடங்களுக்கு மேலாக இருந்து வந்த போரை முடிவுக்கு கொண்டு வர முடிந்தது. எனினும் தற்போது நாட்டில் அப்படியான தலைமைத்துவம் இல்லை. தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்து மூன்று வருடங்கள் கடந்துள்ள போதிலும் நாட்டுக்கு எந்த நன்மையும் நடக்கவில்லை. கடந்த அரசாங்கம் பயங்கர யுத்தத்தை எதிர்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலும் நாட்டு மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்தது. வருவான தலைமைத்துவம் இருந்தமையே இதற்கு காரணம் எனவும் சமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.