வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பாரம்பரியங்களையும் விழுமியங்களையும் பாதுகாப்போம் என்று வலியுறுத்தி கல்லூரியின் மீது அக்கறை கொண்ட சமூகத்தால் அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் நாளைமறுதினம் (24.07.18) காலை 7.30 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணக் கல்லூரி வாயிலில் முன்னெடுக்கப்படும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கல்லூரியின் மீது பற்றுக்கொண்ட பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகளை கலந்துகொண்டு ஆதரவளிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.
அமைதிவழியில் முன்னெடுக்கப்படும் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தின் ஊடாக யாழ்ப்பாணக் கல்லூரியின் பாரம்பரியங்கள் – விழுமியங்களைப் பாதுகாக்க வட்டுக்கோட்டை கல்விச் சமூகம் அழுத்தமாக வலியுறுத்தும் என ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாண கல்லூரியின் உறவுகள் இணையவேண்டும்
“யாழ்ப்பாணக் கல்லூரிக்கு என்று வரலாறு உண்டு. கல்லூரியின் பாரம்பரியங்கள் 150 வருடங்கள் கட்டிப் பாதுகாக்கப்பட்டன. அந்த பாரம்பரியங்களை சிதைக்கும் வகையில் சில சக்திகள் அண்மைக்காலமாக செயற்படுகின்றன.
கல்லூரியின் ஆளுநர் சபையில் உள்ள சிலர், பாடசாலையின் பதவிநிலைகளில் உள்ளவர் மற்றும் ஆசிரியர்கள் சிலரின் விரும்பத்தகாத – ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கன. அவை துடைக்கப்படவேண்டும் – தூக்கி வீசப்படவேண்டும்.
எமது கல்லூரியின் பாரம்பரியங்கள், விழுமியங்களை நாமே பாதுகாக்கவேண்டும். அதற்கு கல்லூரியின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், வட்டுக்கோட்டை – அயல் கிராமங்களின் மக்கள் ஒன்றிணைய வேண்டும்” என்று யாழ்ப்பாண கல்லூரியின் பழைய மாணவர் சங்கத் தலைவர் எஸ்.ஜே.நிரோஷன் கேட்டுள்ளார்.
தர்மகர்த்தா சபையின் முடிவை வரவேற்கிறோம்
“யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபையிலும் கல்லூரியின் நிருவாகத்திலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் நோக்கில் ஆளுநர் சபையின் தலைவர் பேராயர் டானியல் தியாகராஜாவும், சபையின் உப தலைவரான சட்டத்தரணி செல்வி விஜுலா அருளானந்தமும் பதவி விலகவேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள கல்லூரியின் தர்மகர்த்தா சபை வலியுறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை இடம்பெறும்வரை கல்லூரிக்கு வழங்கப்படும் நிதியை இடைநிறுத்தவும் தர்மகர்த்தா சபை முடிவு செய்துள்ளது.
இந்த முடிவு வரவேற்கத்தக்கது. தர்மகர்தா சபை முடிவு எடுக்க முன்னேரே யாழ்ப்பாணக் கல்லூரியின் நிர்வாக சீர்திருத்ததுக்கு பழைய மாணவர் சங்கமும் வட்டுக்கோட்டை கல்விச் சமூகமும் பல தடவைகள் அழுத்தங்களையும் ஆலோசனைகளகயும் வழங்கி வந்தன. அவற்றை சீர்தூக்கிப் பார்க்கத் தவறியதாலேயே கல்லூரி பெரும் நிதி நெருக்கடிக்குள் இன்று தள்ளப்பட்டுள்ளது. எனவே கல்லூரியை பாதுகாப்பதற்கு தர்மகர்த்த சபையின் பரிந்துரைகளை அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்றும் யாழ்ப்பா
1 comment
யாழ்ப்பாணக் கல்லூரியின் (#JaffnaCollege) பாரம்பரியங்களை இதுவரை மொட்டைக்கடிதங்கள் எழுதி காப்பாற்ற முயன்று இப்போது அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் நாடாத்தி மூக்குடையப் போகுது ஒரு கூட்டம். ஊர்களில் இருக்கிற சின்ன சின்ன மகாவித்தியாலங்களது பழைய மாணவர்கள்கூட தமது பாடசாலைகளுக்கு தம்மால் முடிந்த உதவிகளை செய்கின்றனர். யாழ்ப்பாணக் கல்லூரியில் படித்த தறுதலைகள் மட்டும் மொட்டைக் கடிதம் எழுதி படித்த பாடசாலைக்கே துரோகம் செய்துகள். எங்கே போய் முடியுது பார்ப்போம். சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிஷ்ணனின் இரண்டாம் மனைவியும் மகளுமாக ((illegitimate) சேர்ந்து உடுவில் மகளிர் கல்லூரியை பூட்டி வைத்து சுமார் முப்பது மாணவிகளோடு போராட்டம் நடத்தியது பலருக்கும் ஞாபகம் இருக்கும்.
யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபையே உடுவில் மகளிர் கல்லூரியையும் முகாமைத்துவம் செய்கிறது. இரு கல்லூரிகளுமே அமெரிக்கன் சிலோன் மிசனால் உருவாக்கப்பட்டவை. அதுவே இன்று தென்னிந்திய திருச்சபை – யாழ் ஆதினம் என இயங்கிக்கொண்டிருக்கிறது. பச்சிளம் குழந்தைகளை பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்தியும் ஒல்லாந்து நாட்டவர்களுக்கு விற்றும் பணம் சம்பாதித்த ஜெயநேசனுடன் அவசரப்பட்டு ஒரு கூட்டம் கிளம்பி சென்றதும் அல்லாமல் அவர்களே எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணமாகவும் உள்ளனர். யாழ்ப்பாணக் கல்லூரி இப்போது முன்னரைவிட சிறப்பாக இயங்குகிறது. இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு தென்னிந்திய திருச்சபையே முகாமைத்துவம் செய்கிறது. முன்னர் கல்லூரியிலும் திருச்சபையிலும் நிறைய ஊழல்கள் இருந்தன. இவற்றை அம்பலப் படுத்தியது எனது தந்தையார். சாகும்வரை உண்ணாவிரதம்கூட இருந்தார். அதன் காரணத்தாலேயே எனது தந்தையாரான Veerasingam Gnanasangary கொலை செய்யப்பட்டார். எனது தந்தையார் மீது துப்பாக்கி பிரயோகம் செய்த நபரின் குடும்பத்துக்கு அன்றைய திருச்சபையால் கோணாவில் என்னும் இடத்தில் வயல் நிலங்களும் வீடும் வழங்கப்பட்டது.
இறுதியாக, யாழ்ப்பாணக் கல்லூரி ஒரு தனியார் பாடசாலை. அந்த கல்லூரிக்கென்றே இலங்கையில் சட்டம் உருவாக்கப்பட்டது என்பது அதன் பெருமை. அதன் ஆளுநர் சபையை பழைய மாணவர்களோ, இலங்கை அரசோ, தர்மகர்தா சபையோ மாற்றி அமைக்க முடியாது. எவருக்கும் அதற்கான உரிமைகள் இல்லை. தர்மகர்தா சபை இலங்கையின் சட்டத்துக்கு முரணாக நடந்துகொள்கிறது. கல்லூரியின் நிர்வாகத்தில் மூக்கை நுழைத்து blackmail செய்கிறது. தர்மகர்தா சபை முற்றாக நிதியை முடக்கும் பட்சத்தில் தனியார் கல்லூரியான #JaffnaCollege தொண்டு நிறுவனமாக தொடராது பணம் பெற்று சேவை வழங்கும் நிறுவனமாக இயங்க வைக்க முடியும். இலங்கையில் எத்தனையோ சர்வதேச பாடசாலைகள் இயங்குகின்றன. நிர்வாகம் நினைத்தால் தமது சொத்துக்களை விற்பனை செய்யவும் முடியும். ஒரு தனியார் கல்லூரியில் இலவசமாக படித்தவர்கள் நடந்து கொள்ளும் முறை அழகல்ல.