போர்மியுலா வன் கார்ப்பந்தயப் போட்டியில் மெர்சிடிஸ் அணிக்காக விளையாடும் இங்கிலாந்தின் லுயிஸ் ஹமில்டன் ( Lewis Hamilton ) முதலிடத்தினை கைப்பற்றியுள்ளார். இந்த ஆண்டுக்கான போர்மியுலா வன் கார்பந்தயப் போட்டி 21 சுற்றுகளாக நடத்தப்படுகின்ற நிலையில் அதன் 11-வது ஜெர்மன் கிராண்ட் பிரக்ஸ (German Grand Prix) சுற்று அங்குள்ள ஹக்கென்ஹீம் ஓடுதளத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது 306.458 கிலோ மீற்றர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் போட்டியிட்ட நிலையில் நடப்பு சம்பியனான லுயிஸ் ஹமில்டன் 1 மணி 32 நிமிடம் 29.845 வினாடிகளில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்ததுடன், 25 புள்ளிகளையும் பெற்றுள்ளார்.
இந்தப்பருவகாலத்தில் அவர்பெறும் 4-வது வெற்றி இதுவாகும். பின்லாந்தின் வால்டெரி போட்டாஸ் 2-வது இடம் பெற்றுள்ளார்.
11 சுற்றுக்களின் முடிவில் சம்பியன் பட்டத்திற்கான வாய்ப்பில் ஹமில்டன் 188 புள்ளிகளுடன் முதலிடத்திலும் செபாஸ்டியன் விட்டல் 171 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். 12-வது சுற்று போட்டி எதிர்வரும் 29-ம்திகதி ஹங்கேரியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்க்கது.