ஈரானில் நேற்றைதினமும் இன்றைய தினமும் இடம்பெற்ற நிலநடுக்கங்களில் இதுவரை 400 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் தென்பகுதியில் உள்ள ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் நேற்றையதினம் முறையே . 4.7 மற்றும் 5.7 ரிக்டர் அளவில் இருமுறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருந்தன.
அதன்பின்னர் கேர்மன்ஷா மாகாணத்தில் 5.9 அலகுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் சுமார் 300 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று அதிகாலை ஈரான் தலைநகரர் டெஹ்ரானுன்னு அண்மையில் உள்ள கிராமம் ஒன்றில் ரிக்டர் அளவுக்கோலில் 5.9 அலகுகளில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தில் சுமார் நூறுபேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த நவம்பர் மாதம், கேர்மன்ஷா மாகாணத்தில் 7.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுமார் 620 பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.