வடகொரியா தனது நாட்டின் வட மேற்கு பகுதியில் உள்ள முக்கிய ரொக்கெட் ஏவுதளத்தின் ஒரு பகுதியை அகற்றும் பணியை ஆரம்பித்துள்ளது . கொரிய பிராந்தியத்தை முழுமையான அணுஆயுதமற்ற பகுதியாக மாற்ற தேவையான நடவடிக்கைகளை நோக்கி செல்வது தொடர்பில் வட கொரிய மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகள் சிங்கப்பூரில் சந்தித்த போது உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டிருந்தனர்.
அந்தவகையில் குறித்த ஒப்பந்தத்தின் போது அளிக்கட்ட வாக்குறுதிக்கமைய வடகொரியாவில் உள்ள சோகே எனும் இடத்தில் உள்ள ரொக்கெட் ஏவுதளத்தை அழிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ள வடகொரியா அதற்கான செய்மதிப் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.
வடகொரியா, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரிக்கவும், அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளவும் இந்த சோகே ரொக்கெட் ஏவுதளம் முக்கிய பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.