Home இலங்கை சர்வதேச சட்டமும் கட்புலனாகா கலாசாரப் பாரம்பரியங்களும் – வானதி பகீரதன்…

சர்வதேச சட்டமும் கட்புலனாகா கலாசாரப் பாரம்பரியங்களும் – வானதி பகீரதன்…

by admin

சர்வதேச ஆய்வு மாநாடு – 2018 ஆதார சுருதி உரை –

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் சர்வதேச ஆய்வு மாநாட்டிற்கான ஆதார சுருதி உரைகளை பேராசிரியை கமீனா குணரெட்ண, பேராசிரியை பிரெண்டா .ஈ.எப். பெக், பேராசிரியை எலிசபெத் ஹேமான் ஆகியோர் நிகழ்த்தினர். 15.07.2018 அன்று கமீனா குணரத்தின அவர்கள் ‘சர்வதேச சட்டமும் கட்புலனாகா கலாசாரப் பாரம்பரியங்களும்.’என்ற பொருண்மையில் தமது ஆதார சுருதி உரையினை வழங்கினார். இவ் உரை தொடர்பான சாராம்சத்தைக் குறிப்பிடுவதற்கு முன்னர் பேராசிரியை கமீனா குணரெத்தின அவர்களை அறிமுகம் செய்வது அவசியமானதாகும்.

கமினா குணரெட்ணஎல்.எல.;பிபட்டத்தைக் கொழும்பு பல்கலைக்கழகத்திலும் .எல்.எல்.எம.; பட்டத்தை ஹர்வாட் சட்டப்பாடசாலையில் இருந்தும் பி.எச்.டி யை நியூசிலாந்து வைகாடே பலடகலைக்கழகத்திலும் பெற்றார். இவர் தற்போது இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டத்துறைப் பேராசிரியராக கடமையாற்றுகிறார். இதற்கு முன்னர் அப்பல்கலைக்கழகத்தின் மானுடவியல் கற்கைகள், மற்றும் சமூக விஞ்ஞானங்கள் துறைத் தலைவராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

கமினா குணரெடணவின் ஆய்வுஈடுபாடுகள் சுற்றுச்சூழல் அபிவிருத்தி, பால்நிலை மற்றும் மனித உரிமைகள் சார்ந்தவைகளாகும். அவர்இலங்கையிலுள்ள பல பல்கலைக்கழகங்களில் பின் பட்டப்படிப்;பு மற்றும் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் சட்டம், மற்றும் மனித உரிமைகள் பற்றிக் கற்பித்து வருகிறார். பல்வேறு விடயங்களில் செயற்பட்டு வரும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட்டு வருகிறார். முன்னர் சுற்றுச் சூழல் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையிலும், பெண்கள் கற்கைகள் மையத்திலும் பணியாற்றினார். தற்போது பெண்களின் கல்வியை கவனிக்கும் அவதானிப்பாளர் சபையிலும் பணியாற்றுகிறார். இன்னும் சுற்றுச் சூழல் சட்டம், மனித உரிமைகள், பெண்கள் பிரச்சினைகள், சட்டக்கல்வி போன்றவை தொடர்பிலான குழுக்களில் அங்கம் வகித்து வருகிறார். அவர் உலக வங்கித்திட்டம், சர்வதேச தொழிலாளர் அமைப்பு, சூழல் ஆய்வு பயிற்சித் தகவலுக்கான மையம் என்பனவற்றுக்கு ஆலோசனை வழங்குபவராகவும் உள்ளார்.

பேராசிரியர் கமீனா குணரெட்ணவின் மரபு வழிவளம், சமத்துவம் மற்றும் சர்வதேசச் சட்டம் என்ற நூல் 2012ல் வெளிவந்தது. அவர் பெண்கள் மற்றும் நில உரிமைகள், பெண் தொழிலாளர உரிமைகள், பாலியல் வன்முறை, சிறுவர் துஸ்பிரயோகம், சட்டக்கல்வி, புலமைத்துவம் பற்றியெல்லாம் எழுதியுள்ளார். வோல்ஃப்சன் கல்லூரி, கொமன்வெல்த் கற்கைகள் துறையிலிருந்தும் (2000 – 2001) கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்திலும் (2000 – 2001) அங்கத்தவர் விருதும் கொலராடோ பல்கலைக்கழக சட்டப் பாடசாலையில் இருந்து புல்பிரைட் ஆய்வு மற்றும் விரிவுரையாளர் விருதும் இவருக்குக் கிடத்துள்ளன. எனவே இத்தகைய சிறப்பும் புலமையும் மிக்க ஒருவரை எமது நிறுவகம் ஆதாரசுருதிஉரையாற்ற அழைத்தமை சிறப்பிற்குரியது எனலாம்

‘சர்வதேச சட்டமும் கட்புலனாகக் கலாசாரப் பாரம்பரியங்களும்’ என்ற தலைப்பில் ஆதார சுருதி உரையாற்றிய கமீனா அவர்;களின் உரையின் சாராம்சம் பின்வருமாறு அமைகின்றது. முதலில் அவர் இத்தலைப்பில் உரையாற்றுவதற்கு காரணமாக அமைந்த யுனெஸ்கோ ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான, கலாசார அமைப்பின் ஏழாவது மாநாடு பற்றிக் குறிப்பிட்டார். யுனெஸ்கோ அமைப்பின் இந்த ஏழாவது மாநாடு நடந்து கொண்டிருந்த காலத்தில், பாரிஸ் தேர்தல் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர், 2018 ஐ{ன்ஆறாந் திகதி இலங்கை 2018- 2022 காலப்பகுதிக்குரிய கட்புலனாகா கலாசாரப் பாரம்பரியங்களை பாதுகாப்பதற்கான செயற்குழு அமைக்கப்பட்டமை பற்றியும் அச் செயற் குழுவில் ஓர் அங்கத்தவராக அவர் தெரிவு செய்யப்பட்டமை பற்றியும் குறிப்பிட்டார்;. அவர் இந்த ஏழாவது மாநாட்டைப் பற்றி; பேசும்போது குறிப்பாக கலாசாரப் பாரம்பரியத்துள் அடங்கியுள்ள பாரம்பரிய அறிவு பற்றியும் அது தற்போது எதிர் கொண்டுள்ள சவால்கள் பற்றியும் அதை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பது பற்றியுமே எடுத்துரைத்தார்.

முதலில் சுருக்கமாக கட்புலனாகா கலாசாரப் பாரம்பரியத்தை எவ்வாறு சர்வதேச சட்டம் அடையாளம் கண்டு கொண்டது என்பதைக் கூறினார். 1972 ல் உலகப்பாரம்பரியங்கள் உடன்படிக்கையை அதனுடைய முழுப்பெயர் இயற்கை மரபுரிமை மற்றும் உலக கலாசாரங்களின் பாதுகாப்புப் பற்றிய உடன்படிக்கை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டன. இந்த உடன்படிக்கையின் நோக்கம் இயற்கை மற்றும் கலாசார மரபுரிமை செல்வங்களை பாதுகாத்தலும் பேணுவதுமாகும். வுழமையான செயற்பாடுகளாலும் சமூகப்பொருளாதார நடவடிக்கைகளாலும் அவைகள் சிதைந்து போகாமல் தடுப்பது அதன் முக்கிய செயற்;பாடாகும் எனக் குறிப்பிட்டார். எமது பாரம்பரிய இடங்கள் முக்கியமானவை என்றும் அவைகளை எதிர்கால சந்ததிக்காக பாதுகாத்தல் அவை அமைந்திருக்கும் நாடுகளின் கடமை மாத்திரம் அல்ல அனைத்துலக நாடுகளின் சர்வதேசத்தினதும் கடமையும் பொறுப்பும் ஆகும் என்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது எனவும் கூறினார்.

உலகப்பாரம்பரிய உடன்படிக்கை கட்புலனாகும் கலாசாரப்பாரம்பரியங்களை மாத்திரம் பேணமுனைந்தது – கட்டடங்கள், நினைவுச்சின்னங்கள்,தலங்கள், பொருட்கள் போன்றவற்றையே அது கருத்தில் கொண்டது. கட்புலனாகா கலாசார பாரம்பரியம் கருத்தில் கொள்ளப்படவில்லை. கட்புலனாகா கலாசார பாரம்பரியம் என்றால் என்ன? எனவும் கேள்வி எழுப்பினார். அவர் மேலும் தெரிவிக்கையில்

2003ல் முப்பதுவருடங்களுக்கு பின்னர் பல்வேறு அழுத்தங்களால் யுனெஸ்கோ தனது கலாசாரப் பாரம்பரியம் பற்றிய தனது கோட்பாட்டை மீள்வரையறை செய்ய முன்வந்தது. அது கட்புலனாகா கலாசார பாரம்பரியத்தையும் கலாசார பாரம்பரியத்தின் ஓர் அங்கமாக ஏற்றுக்கொண்டது. அது பற்றிய அதன் வரையறை வருமாறு: ‘நடைமுறைகள் பிரதியாக இருத்தல், வெளிப்பாடு, அறிவு , தேர்ச்சி இவைகளை போல கலாசார குழுக்களின் உபகரணங்கள், பொருட்கள், பாhவனைப்’ பொருட்கள், கலாசார குழுக்கள் இன்னும் தனி நபர்கள்’ என்பன தொடர்பாக உருவானவை. ஏதிர்கால தலைமுறைகளுக்காக இச்செல்வங்களை பாதுகாக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது. கட்புலனாகும் கட்புலனாகா மரபுகளுக்கிடையே விளக்கமுடியாத இணைப்பு உண்டு. யமடோவின் பிரகடனம் கட்;புலனாகும் கலாசார பாரம்பரியங்களை பாதுகாத்தல் போன்று கட்புலனாகா கலாசாரப்பாரம்பரியங்களை பாதுகாத்தல் முக்கியமானது. இதை ஒன்றிணைந்த நோக்கு என்று குறிப்பிடுகின்றது. அவைகள் இரண்டும் ஒன்றோடொன்று சார்ந்துள்ளவை.
கட்புலனாகும் கலாசார அம்சங்கள் ஒரு குறித்த இடத்தோடும் பொருளோடு சம்பந்தப்பட்டவை. கட்புலனாகா கலாசார மரபுகள் அப்படிப்பட்டவை அல்ல. அவை தொடர்ச்சியாக மாறியும் புதிது புதிதாக புனைந்து வருபவை எனக் கூறினார்.

யுனெஸ்கோ கட்புலனாகா கலாசார பாரம்பரியத்தை பாரம்பரியமானதாக, சமகாலத்ததாக பார்க்கின்ற அதே நேரத்தில் அது ஒரு வாழும் தன்மை கொண்டது என்றும் வரையறுக்கிறது எனவும் அதன் வரையறையை ‘கட்புலனாகா பாரம்பரியம் பழமையிலிருந்து அல்லது சமகாலத்திலிருந்து அல்லது நகர வாழ்விலிருந்து கிளைத்ததாக இருக்கலாம். அது ஒன்றுக்கு மேற்பட்ட சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தலாம். அல்லது ஒரு சமூகம் மற்றைய சமூகத்திலிருந்து தலைமுறைதலைமுறையாக தழுவிக்கொண்டதாக இருக்கலாம். இதனால் கட்புலனாகா பாரம்பரியம் சமூகம் சார்ந்தது. அதனை சமூகமே படைத்து,பாராமரித்து,கடத்துகிறது.’எனக் கூறினார்.

கட்புலனாகும் கட்புலனாகா கலாசார பாரம்பரியங்கள் நாட்டின் அல்லது சமூகத்தின் கலாசார வரலாறாக இருந்த போதிலும் அவற்றைப்பாதுகாக்க வௌ;வேறு உபாயங்களையும் உத்திகளையும் பயன்படுத்த வேண்டியுள்ளது என்றும் கட்புலனாகும் மரபுரிமைகளை பாதுககாத்தல் சுலபமானது என்றும் அவைகளை பாதுகாக்க திருத்துதலும் பேணுதலும் போதுமானது என்றும் குறிப்பிட்ட கமீனா அவர்கள் கட்புலனாகா மரபு அப்படியானதல்ல அதற்கு முதலில் அம்மரபுக்குரிய சமூகத்தை விளங்கிக்கொள்ள வேண்டும் எனவும் அது எதிர் நோக்கும் சவால்களை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் இது சற்று வித்தியாசமான செயற்பாடாகும் எனவும் குறிப்பிட்டார். இந்த உரையில் அவர் கட்புலனாகா கலாச்சாரத்தின் ஓர் அம்சமான பாரம்பரிய அறிவு பற்றியே கவனம் செலுத்துவதாகவும் கட்புலனாகா கலாச்சார பாரம்பரியத்தோடு அதன் அறிவையும் அதன் நடைமுறையையும் இணைத்தே சமூகம் நோக்குகின்றது எனவும் கருத்துத் தெரிவித்தார்.

பாரம்பரிய அறிவை உலக அறிவு சொத்து ‘குறித்தப் பாணியில் அறிந்து, திரட்டி, நடைமுறைப்படுத்தி தலைமுறைதலைமுறைகளாக ஒரு சமூகத்துள் கடத்தப்பட்டு வரும் அறிவு’ என்று வரைவிலக்கணப்டுத்துகின்றது. அவ்வறிவு அச்சமூகத்தின் கலாச்சார ஆன்மீக அடையாளமாகவும் இருக்கும். இன்னொரு வரைவிலக்கணம் உலகமடங்கிலும் உள்ள தேசிய மற்றும் உள்ளுர் சமூகங்கள் கொண்டிருக்கும் உயிர் பல்வகைமை பற்றிய அறிவாகும் என்று கூறுகின்றது. இந்த அறிவை பல நூற்றாண்டுகளாக தனது சூழலுடன் வாழ்வதன் மூலமாக அச்சமூகம் ஈட்டிக்கொள்கின்றது. அவ்வறிவு வாய்மொழிமூலமாக கடத்தப்பட்டும் திருத்தப்பட்டும் வருவதாகும். அவ்வறிவு விவசாயம், மீன்பிடி, ஆரோக்கியம், தோட்டச்செய்கை, வனப்பாதுகாப்பு சுற்றுச்சூழல் போன்ற துறைகளில் நடைமுறைப்பண்பு கொண்டது எனவும் கூறினார்.

‘பாரம்பரிய அறிவு’ என்ற வார்த்தை பிரயோகத்தில் உள்ள பாரம்பரியம் என்ற சொல் பழையது என்ற கருத்தையும் காலத்தால் மாறாதது என்ற கருத்தையும் மறைமுகமாகவும் வெளிப்படுத்துகின்றது. இதற்கு மாறாக இவ்வறிவு சமகாலத்ததாக, தொடர்ச்சியாக, மாறி வருவதாக புதிய விருத்திகளுக்கும் கருத்துகளுக்கும் இடம்கொடுப்பதாக உள்ளது. இருந்தபோதிலும் எங்கள் வசதிக்காக உபயோகிப்போம் எனக் கூறும் கமீனா அவர்கள் பாரம்பரிய அறிவின் உட்பிரிவின் ஒன்றாக பாரம்பரிய சூழல் அறிவு அல்லது பாரம்பரிய உயிர் கலாசார அறிவு உள்ளது என்றும் இது சுதேசிய மற்றும் உள்ளுர் சமூகங்களின் சூழலில் உள்ள தாவவரங்களின் பயன்பாடு பற்றிய அறிவாகும். இன்று உயிர் பல்வகைமை பற்றி அறிவதற்கு நவீன மேற்கு விஞ்ஞானம் மாத்திரம் ஒரே மூலாதாரம் அல்ல என்ற கருத்து மேலோங்கி வருகின்றது. நமது சூழலில் நெருங்கி வாழ்ந்து அதை நூற்றாண்டுகளாக அவதானித்து பெற்ற அறிவு சேகரத்தை அச்சமூகங்கள் கொண்டுள்ளன. இந்த அறிவு சூழல் மாசடைதல் மற்றும் காலநிலை மாற்றம் போன்றவைகளால் ஆபத்தை எதிர்நோக்கும் இன்றைய உலகுக்கு மிக அவசியமானவைகளாக உள்ளன எனவும் குறிப்பிட்டார்.

பாரம்பரிய அறிவை ஒரு சமூகத்தில் விவசாயிகள், மருத்துவிச்சிகள், மந்திரவாதிகள், பரிசாரிகள் என்போர் கொண்டுள்ளனர். விவசாயிகள் பாரம்பரிய அறிவின் ஒருவகையான விவசாய அறிவை தக்கவைத்துள்ளனர். அது பாரம்பரிய பயிர்ச்செய்கை முறைகள், தாவரங்கள் பற்றிய அறிவு என்பனவற்றை உள்ளடக்கியது.ஆனால் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டியது. பாரம்பரிய அறிவு அழிவை எதிர் கொண்டு இருப்பதாகும.; இதற்கு பல காரணங்கள் உண்டு. ஒன்று அதன் பயன்பாடு இப்போது குறைந்துள்ளது. அதோடு ஆவணப்படுத்தப்படாமல் ஒரு சிலருக்கு மாத்திரம் தெரிந்திருப்பதாகும். பயன்படுத்தப்படாமலும் மற்றவர்களுக்கு கடத்தப்படாமலும் ஒரு அறிவு இருந்தால் அது நிரந்தரமாக இல்லாமல் போகும் எனவும் கூறினார்.

இரண்டாவது அச்சுறுத்தல் முதலாவதோடு இணைந்துள்ளது. மேற்கு விஞ்ஞானத்துக்கும் பாரம்பரிய அறிவுக்குமிடையே ஒரு பிளவு காணப்படுகின்றது. இப்பிளவை ஏற்படுத்தியவர்கள் மேற்கு விஞ்ஞானம் கற்றவர்களாவர். அவர்கள் இயற்கை உலகு பற்றிய பாரம்பரிய அறிவை நம்பகமானதாக கொள்ளவில்லை. அப்படி அவர்கள் ஏற்காவிட்டாலும் விவசாயபயிர்கள், மருத்துவ தாவரங்கள், உயிர் பல்வகைமையை பாதுகாத்தல் போன்றவற்றுக்கு பாரம்பரிய அறிவை சார்ந்துள்ளனர். மரபு வழித்தாவரங்கள் பற்றிய தகவல்களுக்கும் அவர்கள் அதை சார்ந்துள்ளனர். அண்மை காலத்தில் மரபு வழித்தாவரங்களை வர்த்தக நோக்கங்களுக்கு பயன்படுத்துவது பற்றிய கரிசனம் அதிகரித்து வருகின்றது. இன்னும் சூழலியல் பற்றிய பாரம்பரிய அறிவு வர்த்தக நோக்கில் முதன்மை பெற்று வருகின்றது. மருத்துவ, விவசாய, தாவரங்களை விருத்தி செய்வதற்கு பெருமளவில் பாரம்பரிய அறிவை இலங்கை போன்ற நாடுகள் பயன்படுத்துகின்றன எனக் கூறினார்.

அடுத்ததாகபாரம்பரிய அறிவுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களின் தன்மை பற்றிய கருத்துக்களை முன்வைத்தார்.

இயற்கை வளத்துக்கும் பாரம்பரிய அறிவுக்கும் ஏற்படும் அச்சுறுத்தல் உயிர் கொள்ளையால் அதிகரித்து வருகிறது. உயிர்கொள்ளையை அதிகாரமில்லாமல் பாரம்பரிய அறிவின் துணையுடன் உயிரியல் வளத்தை தேடிப்பயன்படுத்துதல் என்று வரையறுக்கலாம். வளர்முக நாடுகளில் அதிகாரமில்லாமலும் நட்ட ஈடு வழங்காமலும் உயிர் வளத்தை பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகின்றது. இது உயர் தொழினுட்ப செயல்பாடுகளில் வர்த்தக நோக்கில் உற்பத்திகளை செய்ய பயன்படுகின்றது. இதை செய்ய உள்ளுர் சமூகத்தின் பாரம்பரிய அறிவை பயன்படுத்துகின்றனர். இந்த அறிவின் துணைகொண்டு பொருத்தமான தாவரங்களை தேடி இனம் காண்கின்றனர். கடைசியாக இதன் தனிp உரிமை இந்த சமூகங்களுக்கு போகாமல் வர்;த்தக உற்பத்திக்கு முதலீடு செய்தவருக்கே போய் சேருகிறது எனவும் கூறினார்.

இலங்கை உட்பட பல நாடுகள் தங்கள் தனி உரிமை பறிபோனமை பற்றி பல வழக்குகள் தாக்கல் செய்துள்ளன எனவும் பல சந்தர்ப்பங்களில் அனுமதியில்லாமல் உள்ளுர் தாவரங்களையும் விலங்குகளையும் கடத்துபவர்களை சுங்கத் திணைக்களம் கைது செய்துள்ளது எனவும் அண்மைக்காலத்தில் வல்லப்பட்டையும் கோதாலாகிம்பூட்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளன. கோதாலாகிம்பூட்டும் நீரழிவை கட்டுப்படுத்தும் மருந்தாக பயன்படுத்தக்கூடியதென்றும் வல்லப்பட்டை இருமலுக்கும் சளிக்கும் மருந்தாக உபயோகிக்கக்கூடியதென்றும்; சொல்லப்படுவதாகக் கூறினார். .

உயிர் கொள்ளை சம்பவங்களைப் பற்றி எல்லோருக்கும் தெரிவதாகும் எனக் கூறியதோடு உயிர் கொள்ளையை கட்டுப்படுத்தும் மார்க்கங்கள் பற்றியும் குறிப்பிட்டார். முதலாவது இலங்கையில் இதை தவிர்ப்பதற்கு பொருத்தமான சட்டம் ஒன்று ஆக்கப்படவில்லை என்பது துரதிஸ்டமானது எனினும் தாவர விலங்கு பாதுகாப்பு சட்டம், வனபாதுகாப்பு ஒழுங்கு சட்டம் என்பன இப்பிரச்சினையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன. ஆயினும் இவை போதுமானதில்லை பாரம்பரியஅறிவைப்பாதுகாக்கும் சட்டமொன்றுக்கான எண்;ணம் கருத்து நிலையில் இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

பாரம்பரிய தாவரங்களை பாதுகாத்தல் பற்றியும் பாரம்பரிய அறிவு தரங்குறைவது பற்றியும் தனி உரிமைப்பத்திரம் பெறுவது பற்றியும்தமது உரையில் தெரிவித்தார். ஒரு உற்பத்திப் பொருளுக்கு தனி உரிமைப் பத்திரம் பெற அது புது உற்பத்தியாக இருக்க வேண்டும். வுசுஐஐPளுஒப்பந்தத்தின் படி எந்தப்புத்தாக்கமும் புதிதாகவும் கைத்தொழில் செயன்முறைகளுக்கு உட்பட்டதாகவும் இருந்தால் அதற்கு தனி உரிமை பத்திரம் கொடுக்கலாம். இங்கே புதியது என்பது சிக்கலானதும் பிரச்சினைக்குரியதுமாகும். ஏனெனில் அவை உற்பத்திப் பாரம்பரிய அறிவைப் பயன்படுத்தி செய்யப்பட்டதாகும் என விளக்கினார்.

உலக அறிவு சொத்துடமை அமைப்பு ஒரு உற்பத்தி புத்தாக்கமானதா என்பதற்கு பாரம்பரிய அறிவு பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கவனிக்குமாறு கூறுகிறது. இதை வெளிப்படுத்துவது புத்தாக்குநரின் கடமையாகும். ஆயினும்; அதை புத்தாக்குநர் செய்வதில்லை அறிவு சொத்துடமை சட்டம் பிரத்தியோகமாக மேற்கு நாடுகளில் பாரம்பரிய அறிவை ஒரு முன்னோடி அறிவாக கணிப்பதில்லை. இன்று வளர்முக நாடுகளும் இதையே பின்பற்றுகின்றன. இந்தப்பிரச்சினையை எவ்வாறு விளங்கிக்கொள்வது? என கேள்வி எழுப்பினார்.

அவர் பல வருடங்களாக இரு தேர்வுகளை விவாதித்து வருவதாகவும் அவை பாரம்பரிய அறிவு பொருத்தமில்லாமல் போவதை தடுக்கப் பயன்படக்கூடியது எனவும் முதலாவது தேர்வு அறிவு சொத்து உரிமை சட்டத்துள் வருகிறதுஎனவும் கூறினார்.
இந்த தந்திரோபாயம் தற்பாதுகாப்பு நடவடிக்கை என அழைக்கப்படுகின்றது. பாரம்பரிய அறிவை அறிவு சொத்துடமை சட்டம் பாதுகாக்காது என்பது இதன் கருத்தல்ல பாரம்பரிய அறிவைப் பயன்படு;த்துதல் கண்டுபிடிப்புகளுக்கு தனி உரிமை பத்திரம் அளிக்க கூடாது என்று இது கூறுகிறது. இதனைத் தவிர்ப்பதற்கு பாரம்பரிய அறிவுத் தொகுதியின் ஒரு பாகம் என்று அங்கீகரிக்கப்பட வேண்டும்.

இந்த உபாயத்தில் இரு அம்சங்கள் கலந்துள்ள தாகவும் முதலாவது சட்ட அம்சம் என்றும் இரண்டாவது நடைமுறை அம்சம் என்றும் குறிப்பிட்ட கமீனா சட்ட அம்சம் பாரம்பரிய அறிவை தேசிய சர்வதேச சட்டம் அங்கீகரிக்க வைத்து அதன் அடிப்படையில் நிகழும் புத்தகங்களை வலிவற்றதாக்கியது என்றும் மேற்கு விஞ்ஞானமும் அறிவு சொத்து சட்டமும் பாரம்பரிய அறிவை அங்கீகரிக்கவில்லை என்றும் கருத்துத் தெரிவித்தார். இதற்கான காரணங்களில் ஒன்றும் எழுதப்படாத நிலையில் உள்ளமையாகும். அது வாய்மொழிக்குரியதா என்றும் கேள்வி எழுகிறது. பல தேசிய,சர்வதேச சட்டப்புலமையாளர்கள் பாரம்பரிய அறிவை எழுத்தில் கொண்டு வரும்படி வற்புறுத்துகின்றனர். இது நாடுகளுக்குள்ளும் வெளியிலும் பல முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளது. உதாரணமாக கொகெம்பா என்று அழைக்கப்படும் நீம் உற்பத்திகளுக்கு இலங்கையும் கூடிய தாவரத்துக்கு தென் ஆப்பிரிக்காவும் மஞ்சளின் மருத்துவ குணங்களுக்கும் ஆயகூஸ்காவுக்காகவும் அமேசன் வடிநிலப்பிரதேசங்களுக்கும் தனி உரிமை பத்திரம் கிடைத்துள்ளன. மேற்கு விஞ்ஞானிகளும் சட்டத்தரணிகளும் ஆவணப்படுத்தப்படாத அறிவு சொத்து பற்றிய பரிசீலனைக்கு ஒத்துவராது. இதனால் இவ்வறிவை முன்னோடி அறிவென்று ஏற்ற முடியாதுள்ளது என்கின்றனர் எனக் கூறினார்.

இப் பிரச்சனைகளை எவ்வாறு தீர்ப்பது? என கேள்வி எழுப்பிய இவர் முதலில் பாரம்பரிய அறிவுக்கு சட்ட பாதுகாப்பு கொடுத்து தடைகளை தாண்டுவது பின்னர் நடைமுறை பிரச்சினைகளைக் களையலாம் என்றார்.

பாரம்பரிய அறிவு அடையக்கூடிய ஒன்றாக மாற்றுவதால் அதை நிலைபேறுடையதாக மாற்றலாம். அதாவது அறிவை பதிவு செய்து வெளியிடுதல் இதனால் தீமைகளும் உண்டு என்பதை கருத்தில் கொள்ளுதல் வேண்டும். தீமை என்பது அவ்வறிவு துஷ;பிரியோகத்துக்கு உள்ளாதலும் பிறர் தமதென்று தழுவிக்கொள்ள வாய்ப்பேற்படுவதுமாகும். இதுதான் சமூகமும் அரசாங்கமும் எதிர்கொள்ளும் இக்கட்டான நிலையாகும்.

இந்தியா பாரம்பரிய அறிவை ஆவணமாக்க முயற்சி எடுத்த போது இவ்வாறான ஆபத்துக்களை எதிர்கொண்டது. அது சமூக உயிர்பல்வகை பதிவு,மக்கள் உயிர்பல்வகைமைப் பதிவு என்ற இரு வகை பதிவுகளை கையாண்டது. அது புதுமையாக்கங்களுக்கு வேறொரு பதிவையும் வைத்திருந்தது. உலகத்தின் மிகப்பெரிய தரவு தளமான அதில் (கொளி பீ என்னும் பெயர் கொண்டது) 10000 க்கு மேற்பட்ட புதுமையாக்கங்களும் – தனிநபர்கள்இ சமூகங்கள் என்ற இரண்டுக்கும் உரியவை கிடைக்கின்றன. இந்தியா 2 மில்லியன் ரூபா செலவில் பாரம்பரிய அறிவுக்கான டிஜிடல் நூலகத்தையும் கலைக் களஞ்சியத்தையும் உருவாக்கியுள்ளது. உயிரியல் வளத்தோடு இணைந்த பாரம்பரிய அறிவை பாதுகாப்பதற்கான புதிய திட்டம் ஒன்றை அறிவு சொத்து உரிமை சட்டத்திலிருந்து வேறுபட்டதாக உருவாக்கப்படல் வேண்டும்; என்று கருதுகிறது. ஆயினும் இந்த புதிய அமைப்பு எவ்வாறு தொழிற்பட வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இவ்வறிவை பொதுச் சொத்தாக்கினால் மக்கள் அதை பாதுகாக்க முன் வரமாட்டார்கள் இதனால் பாதுகாப்பை விட கொள்ளையே அதிகரிக்கும்.

பாரம்பரிய அறிவை பாதுகாக்க எந்த மாற்று முறைமையும் இல்லை என்பதை கருத்தில் கொள்ளுதல் வேண்டும் எனவும் சமூக உரிமைகள், வழமைச் சட்டம் என்பவற்றுக்கு கீழ் பாரம்பரிய அறிவை பாதுகாக்கலாம் என்ற கருத்தை சிலர் கெர்ணடுள்ளனர்எனவும் எழுதப்படாத வழமை சட்டத்தால் அதிக சந்தர்ப்பங்களில் வெற்றிகரமாக செயல்பட முடிவதில்லை. பாரம்பரிய அறிவு பொதுமக்கள் சொத்து, அதை பயன்படுத்த எவருக்கும் உரிமையுண்டு என்ற கருத்தால் அவை அதிகம் முடக்கப்படுகின்றன என்றும் இதனால் சமூக அறிவு சொத்து உரிமைகள், சமூகத்தை அடித்தளமாக கொண்ட அறிவு சொத்து உரிமை, பாரம்பரிய வள உரிமைகள் இயற்றப்படுதல் வேண்டும்எனவும் கூறினார்.

ஆபிரிக்க விவசாயிகள், இடையர்கள் ஆகிய உள்ளுர் சமூகங்களின் உயிர்வள பாதுகாப்பு சட்டங்கள் அவர்களுக்கு பாதுகாப்பளிப்பதை அங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இச்சட்டங்கள் பல நூற்றாண்டுகளாக புதுமையாக்கம், நடைமுறை, தொழிநுட்பம் ஆகியவைகள் ஊடாக பெற்றுவரும் அறிவை தமது பொதுப்பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கின்றன. தங்கள் உயிர்பல்வகைமையை பாதுகாக்கவும் பேணவும் உதவுகின்றன. இந்த சட்டங்கள் எழுதப்பட்டாலும் எழுதப்படாவிட்டாலும் அதன் அம்சங்கள் அவர்களின் வழக்கங்கள், நடைமுறைகள்,வழமைகளில் உள்வாங்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்துவதால் அவைகள் அறிவு,சொத்துடமை சட்டத்தோடு முரண்படுகின்றன. அறிவு சொத்துடமை சட்டம் பாரம்பரிய அறிவை பாதுகாப்பதற்குரிய ஏற்பாடுகளை கொண்டிருப்பதாக தெரியவில்லை. அது அதற்கு அச்சுறுத்தலாக இருக்கிறதென்றும் கூறத் தோன்றுகின்றது. இப்போது (சர்வதேச சட்டம்) கட்புலனாகா கலாசாரப் பாரம்பரியத்தையும் அதன் பாதுகாப்பையும் இனம்கண்டு சாதகமாக செயல்பட முன் வந்துள்ளது என்பது மகிழ்வைத் தருவதாக தெரிவித்தார்.

கட்புலனாகா கலாசார பாரம்பரியத்துக்கும் அதனுடைய செயற்;பாடுகளுக்கும்; தனி உரிமைப் பத்திரம், பிரதி உரிமை போன்றவை வழங்குதல் பற்றி விவாதிக்கப்படுகின்றன. அவற்றோடு ஆற்றுகைகள், மரபு வழி கலாசார வெளிப்பர்டுகள், நாட்டார் கலைகள் என்பவைகளும்; கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இவற்றில்; பெரும் வர்த்தக மதிப்புகள் அடங்கியுள்ளன எனக் கூறினார்.

கொலம்பிய அரசாங்கம் இதை நடைமுறைப்படுத்த பல வழிகளில் முயற்சி எடுத்தது. அதற்காக அவசரமாக பாதுகாப்பு தேவைப்படும் கட்புலனாகா பாரம்பரியங்களின் பட்டியல் ஒன்றை தயாரித்தது. சமூகம், குழு, தனிநபர், அரசு,கட்சி போன்றவை முயன்றும் கையறு நிலையில் உள்ளடக்கப்பட்டிருந்தன. பாரம்பரிய அறிவை தனியார் மயமாக்குவதால் ஆபத்துக்குள்ளாகும். கலாசாரப் பாரம்பரியங்களும் இப்பட்டியலில் அடங்கி இருந்தன. இதே போன்று பட்டியல்களை பல நாடுகளும் தயாரித்தன. அவைகளில் உள்ளடங்கி இருந்த ஆபத்தை எதிர்கொள்ளும் பாரம்பரியங்களாவன, யப்பானில் நடைபெறும் நெல்நாற்று நடுகை சடங்கு, அஜர்பைசானின் பாரம்பரிய போர்வை மின்னும்கலை, பாரம்பரியம் மெக்சிகோ நளபாகம், கல்பெலியா நாட்டார் பாடல்கள், ராஜஸ்தான் நடனம் என்பவை சிலவாகும். ஆயினும் பாரம்பரிய அறிவு இவ்வகை பட்டியலில் காணப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

சில நாடுகள் பாரம்பரிய அறிவை பாதுகாக்க மாற்று முறைமைகளை நாடுவதாகவும் கொலம்பியா அரசாங்கம் பழங்குடிமக்களின் கட்புலனாகா கலாசார மரபுரிமையையும் பாரம்பரிய அறிவையும் தனது பட்டியலில் உள்ளடக்கி உள்ளதாகவும் இவர் குறிப்பிடுகின்றார். இந்தப்பட்டியலிலிருந்து ஜாக்குவர் மந்திரவாதி பற்றி எழுதப்பட்டுள்ள குறிப்பை அவர் மேற்கோளாகச் சுட்டிக் காட்டினார். ‘தென் கிழக்கு கொலம்பியாவில் பிரபரணா நதிப்படுகைகளில் வாழும் இனக் குழுக்களின் பொதுவான கலாசார மரபுரிமை அம்சமாக ஜக்குவார் மந்திரவாதிகள் உள்ளனர். பாரம்பரிய அறிவு, சடங்குகள் என்பனவற்றை பயன்படுத்தி அந்த மந்திர வாதிகள் நோய்களை குணப்படுத்துகின்றனர்;, தடுக்குகின்றனர், தேற்றுகின்றனர். சிறுவர்களுக்கு பயிற்சி கொடுத்து வயது வந்தவர் நிலைக்கு கொண்டு வருகின்றனர். இந்த வித்தையை பூமியில் மனிதவடிவில் வந்த சர்வசக்தி படைத்த யுறுபாரி என்ற அனக்கொண்டாவிடம் அந்த மந்திர வாதிகள் பெற்றனர் என்று கருதப்படுகிறது’என்பதே மேற்கோளாகும்.

கமீனாவின் உரையில் கட்புலனாகா கலாசாரத்தின்; ஓர் அங்கமான பாரம்பரிய அறிவு பற்றி விளங்கிக் கொள்வதோடு அந்த அறிவு எதிர் கொண்டுள்ள அச்சுறுத்தல்கள் பற்றியும் அந்த அறிவு உருவான சமூகம் அதன்; பயன்பாட்டை குறைத்தமை பற்றியும் அறிவதோடு அவ்வறிவை அச்சமூகத்துக்கு அப்பால் கொண்டு வருதல் பற்றியும் அதை வேறொன்றாக தழுவிக் கொள்ளல் பற்றியும் அறிய முடிவதோடு அச்சுறுத்தல்கள் என்பதை எடுத்துக் கூறினேன். முதலாவது கூறப்பட்ட அச்சுறுத்தல் சட்ட எல்லைகளுக்கு அப்பாற் பட்டது. இரண்டாவது சொல்லப்பட்டது தேசிய சர்வதேசிய மட்டங்களில் விவாதிக்கப்பட்டும் இன்றும் ஏற்;ற தீர்வு எய்தாமல் உள்;ளது. தழுவிக்கொள்ளல் வழமை, பாரம்பரியம் என்பவைகளுக்கும் நவீன சட்டமுறைகளுக்கிடையிலான முரண்பாட்டை பிரதிபலிக்கின்றது எனவும் கூறினார்.

கோளமயமாதல் உலகில் நாடுகள் தங்கள் அறிவு சொத்துரிமையை தற்காத்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளன.

இலங்கை தனது பாரம்பரிய அறிவின் பிரச்சினைகளை விளக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால் துரதிஸ்டவசமாக தொடர்ந்து வரும் அரசாங்கங்கள் இதை முக்கிய பிரச்சினையாக கவனத்தில் கொள்வதில்லை. எங்கள் பாரம்பரிய அறிவை துஸ்பிரயோகம் செய்வதெற்கெதிரான சட்டம் ஒன்றை இயற்றுவது பற்றி கலந்துரையாடப்பட்டு வருகிறது. ஆயினும் அது ஒரு முடிவை எட்டவில்லை. ஆயினும் அவசியமான கட்டடத்தை அடைந்துள்ளது. அதற்கு முன் அரசாங்கம் துஸ்பிரயோகத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் அவசியமானது எனவும் தேசிய வளங்களையும் அவைகளை சுற்றியுள்ள அறிவையும் பல்கலைக்கழகங்களும் சிந்தித்தல் வேண்டும் எனவும் அவர் தமது உரையில் தெரிவித்தார். அந்தவகையில் பேராசிரியை கமீனா குணரெட்ண அவர்களின் ஆதாரசுருதி உரை மிகுந்த பயனுறுதி வாய்ந்ததாக அமைந்திருந்தது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More