170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று 24-07-2018 கிளிநொச்சி மாவட்டச் செயலக கேட்போா் கூடத்தில் ஆரம்பமாகியுள்ளது. காலை ஒன்பது முப்பது மணிக்கு இணைத்தலைவா்களான வடக் மாகாண முதலமைச்சா் சிவி. விக்கினேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினா்களான விஜயகலா மகேஸ்வரன், சிவஞானம் சிறிதரன், அகியோரின் தலைமையில் இடம்பெற்றறு வருகிறது இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினா்கள், மாகாண அமைச்சா்கள், மாகாண சபை உறுப்பினா்கள், மாவட்ட அரச அதிபா், திணைக்களங்களின் தலைவா்கள், மாவட்ட பொது அமைப்புகளின் தலைவா்கள் என பலா் கலந்துகொண்டுள்ளனர்.
Spread the love