193
யாழில். தென்னிந்திய திரைப்பட பாடல்களை சத்தமாக பாடியவாறு வீதியால் சென்ற ஒருவரை மூன்று நாய்கள் சேர்ந்து கடித்து குதறி உள்ளன. தென்மராட்சி பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த 58 வயதானவர் நாய் கடிக்கு உள்ளாகியுள்ளார்.
குறித்த நபர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் வீதியால் தனது வீட்டினை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த போது எம்.ஜீ.ஆரின் திரைப்பட பாடல்களை சத்தமாக பாடியவாறு சென்றுள்ளார். அதன் போது வீதியில் படுத்திருந்த மூன்று நாய்களும் அவரை விரட்டி விரட்டி கடித்து குதறியுள்ளன. அதனால் படுகாயமடைந்த அவர் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
Spread the love