குழுவாகச் சேர்ந்து வன்முறை மற்றும் கொலையில் ஈடுபடுவதை தடுக்க, தேவைப்பட்டால் அரசு சட்டம் இயற்றும் என இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பசுப் பாதுகாப்பு என்ற பெயரிலும் குழந்தைகள் கடத்தல் வதந்தியாலும் மக்கள் முழுக்களாகச் சேர்ந்து வன்முறையில் ஈடுபடு வதும், சந்தேகத்திற்குரிய நபரை அடித்துக் கொல்வதும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
அண்மையில் ராஜஸ்தா னின் கடந்த சனிக்கிழமை இரவு 28 வயது நபர் ஒருவர் பசுக்களைக் கடத்திச் செல்வதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் அடித்துக் கொல்லப்பட்டார். இந்தநிலையில் குழு வன்முறையை கட்டுப் படுத்த உரிய நடவடிக்கை எடுக்கு மாறு நாடாளுமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் அறி வுறுத்தியிருந்தது.
இதையடுத்து குழு வன்முறை மற்றும் கொலைச் சம்பவங்களைத் தடுப் பதற்கான பரிந்துரைகளை அளிக்க இரு உயர்நிலை குழுக்களை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. இதையடுத்து கருத்து தெரிவித்த போது அமைச்சர் ராஜ்நாத் சிங் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.