நேஷன் பத்திரிகையின் முன்னாள் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகள், அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளனரென காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
2008 ம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டதன் பின்னர் அவர் புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றார். மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைதுசெய்யப்பட்டுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது