குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள மருதநகர் சூல கமம் பிரதேசத்தில் சட்டவிரோதமான மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது எனவும் இதனை இது வரை உரிய தரப்பினர்கள் எவரும் கண்டுகொள்ளவில்லை என்றும் பிரதேச பொது அமைப்புகளும் பொது மக்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி நகரின் மத்தியில் காவல் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீற்றருக்குள், நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கருகருகில், கிளிநொச்சி குளத்திற்கு முன்பாக மருதநகர் சூலகமம் கழிவு வாய்க்காலில் பகல் இரவு வேளைகளில் சட்டவிரோதமாக அதிகளவு மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது.
குறித்த பிரதேசம் மணல் அகழ்வு அனுமதிக்கப்பட்ட பிரதேசம் அல்ல. அத்தோடு வயற்காணிகளுக்கு மத்தியில் இந்த மணல் அகழ்வு இடம்பெறுகிறது. எனவே இந்த சட்டவிரோத மணல் அகழ்வை தடுத்து நிறுத்தாது விடின் அடுத்து வயல்காணிகளில் மணல் அகழ்வுகள் இடம்பெறும்.
எனவே உடனடியாக இதனை கட்டுப்படுத்த உரிய தரப்பினர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மருதநகர் கிராம அபிவிருத்திச் சங்கமும், பொது மக்களும் கோரி நிற்கின்றனா்