இந்தியாவின் கோவா மாநில பாட நூல்களில் நேருவின் படம் நீக்கப்பட்டு சவர்கர் படம் சேர்க்கப்பட்டுள்ளதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் அரஸ் முல்லா தெரிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் இடம்பெற்றிருந்Nது இவ்வாறு நேருவின் படம் நீக்கப்பட்டு சவர்கர் படம் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் தற்கால உலகம் என பெயரிடப்பட்ட அந்த புத்தகத்தில், ‘1904-ம் ஆண்டும் புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்ட முக்கிய புரட்சியாளரான வினாயக் தாமோதர் சவர்கர், அபினவ் பாரத் எனும் இயக்கத்தை தொடங்கி புரட்சிகளை வழிநடத்தினார்’ என புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
ஆனால், ஏற்கனவே இடம்பெற்றிருந்த இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் படம் நீக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாரதீய ஜனதா கட்சியினர் நாளை காந்தியின் படத்தையும் நீக்குவார்கள் எனக் கூறிய அவர், இந்திய விடுதலை போராட்டத்தை வழிநடத்திய காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை என்றும் மாற்றி எழுத முடியாது என்பதை பா.ஜ.க.வினர் புரிந்துகொள்ள வேண்டும் என சுட்டிக் காட்டியுள்ளார்.