சிரியாவின் தெற்கு பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தொடர் தற்கொலைத் தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 200க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .நேற்று தீவிரவாதிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலில் 32 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக முதல் கட்டமாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், சிரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஸ்வேடியா நகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் 3 தற்கொலை தாக்குதலாளிகள் தொடர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 127 பொதுமக்கள் உள்பட 221 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என என சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இந்த தொடர் தற்கொலைப்படை தாக்குதல் சம்பவங்களுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது