ஆந்திராவில் செம்மரம் வெட்டிய நான்கு தமிழர்களை கைது செய்துள்ள காவல்துறையினர் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள காட்டுப்பகுதியில் சிலர் செம்மரம் வெட்டுவதாக இன்று காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலியடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் மீது செம்மரங்களை வெட்டியவர்கள் கற்களால் வீச தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து வானத்தை நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந் 13 லட்சம் ரூபா பெறுமதியான செம்மரங்களும் பறிமுதல் செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆந்திராவில் செம்மரம் வெட்டிய நான்கு தமிழர்கள் கைது…
176
Spread the love