டெல்லியில் பட்டினியால் மூன்று சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையகம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. டெல்லியில் வசித்து வந்த ரிக்ஷா தொழிலாளியான மங்கள் என்பவருக்கு போதிய வருமானமின்மையால் பட்டினியால் பாதிக்கப்பட்டிருந்த 8, 5, 2 வயது பெண் குழந்தைகள் உயிரிழந்திருந்தனர்.
மங்களுக்கு மதுப்பழக்கம் இருந்ததுடன் அவரது மனைவியும் மனநலம் பாதிப்பட்டிருந்தார். மேலும் அவரது ரிக்ஷாவும் திருட்டு போன நிலையில் அவர் வீட்டை விட்டு சென்று விட்டதனால் 3 சிறுமிகளும் பட்டினியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தனர். சிறுமிகளை பரிசோதித்த மருத்துவர்கள அவர்கள் சாப்பிட்டு 8 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கும் என்ற தகவலை வெயிட்டிருந்தனர்
இந்தநிலையில் , பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சு மற்றும் மத்திய, மாநில அரசுகளை இது தொடர்பில் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையகம் அழைப்பாணை அனுப்பியுள்ளது