ஜப்பானில் மேலும் 6 பேருக்கு ஒரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 1995-ம் ஆண்டு ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில்; சுரங்கப்பாதையில் மேற்கொள்ளப்பட்ட விச வாயு தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே மேலும் 6 பேருக்கு நேற்றையதினம் இவ்வாறு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் அம் ஷின்ரிக்யோ என்ற ஆன்மீக குழு ஒன்றின் தலைவரான 63 வயதான ஷோகோ அசஹாரா என்பவரும் அவரது குழுவை சேர்ந்தவர்களுமே மேற்கொண்டிருந்தனர் என்பது நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் ஷோகோ அசஹாராவும், அவரது குழுவை சேர்ந்த 6 பேரும் இந்த மாத தொடக்கத்தில் தூக்கில் போடப்பட்டனர்.
இந்த நிலையில் அந்தக் குழுவில் ஏனைய 6 பேரும் நேற்று ஒரே நாளில் தூக்கில் போடப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் காரணமாக 5 ஆயிரத்து 800 பேர் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது