பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மொஸ்கோ நகருக்கு வருமாறு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புக்கு ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அழைப்பு அழைப்பு விடுத்துள்ளார். அண்மையில் இருவரும் பின்லாந்தில் சந்தித்து ஈரான், சிரியா உள்ளிட்ட உலக நாடுகளின் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்தை நடத்தியிருந்தனர். இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தைகள் குறித்து மேலதிகமாக பேச தொலைபேசி அழைப்புகள் மட்டுமே போதாது என்பதனால் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த மொஸ்கோ நகருக்கு வருமாறு புட்டின் அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை புட்டின் அழைப்பு விடுத்துள்ளதையடுத்து, டிரம்ப் மொஸ்கோ செல்ல விருப்பமாக உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. சூழ்நிலை சரியாக இருந்தால் அமெரிக்காவுக்கு பயணிப்பேன் என வெள்ளிக்கிழமை புட்டின் தெரிவித்ததனையடுத்து ட்ரம்ப் இவ்வாறு விருப்பம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது