வெனிசுவேலாவில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரான ஜோஸ் மனுவேல் ஒலிவர்ஸ் (José Manuel Olivares) அரசு தன்னையும் தனது குடும்பித்தினரையும் அச்சுறுத்துவதாக தெரிவித்து நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
தான் அரசியலைவிட்டு விலகவில்லை என்றால் தன்னையும், தனது மனைவி, மற்றும் சகோதரரை துன்புறுத்தப்போவதாக அரச புலனாய்வுப்பிரிவினர் தெரிவித்துள்ளனர் என வெளிப்படையான கடிதம் ஒன்றின் மூலம் தெரிவித்துள்ள அவர் தனது குடும்பத்தின் நலனே முதன்மையானது எனவும் தெரிவித்துள்ளார். கடந்த சில வருடங்களில் பல எதிர்க்கட்சி தலைவர்கள் வெனிசுவேலாவை விட்டுச் சென்றுள்ளனர்.
அவர்கள் அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மடுராவின் தலையீடு மற்றும் அச்சுறுத்தலால் தங்களின் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்ற அச்சம் காரணமாகவே வெளியேறுவதாக தெரிவித்திருந்தனர் என்பது குறிப்pபடத்தக்கது