மகாராஷ்டிரா மாநிலத்தில் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் ராய்கொட் மாவட்டத்தில் இன்று காலை, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுடன் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த ஒரு பேருந்து அம்பெனலி காட் மலைப்பகுதியில் ஓட்டுணரின் கட்டுப்பாட்டை இழந்த, பள்ளத்தாக்கில் தலைகீழாக விழுந்து விபத்துக்கு உள்ளாகியது.
சுமார் 300 அடி ஆழ பள்ளத்தில் விழுந்ததால் முற்றிலும் சிதைந்து போன பேருந்தினுள் இருந்தவர்கள் 33 பேர் பலியாகியதுடன் பலர் காயங்களுடன் வைத்தியசைாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.