கிழக்கு மாகாணம் யுத்தத்திற்கு முகங்கொடுத்த பிரதேசம் என்பதனால் அதனை பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்ய வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இரண்டு கோடியே 70 இலட்சம் ரூபா நிதியில் நிர்மானிக்கப்பட்ட மட்டக்களப்பு மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்கான புதிய கட்டடித்தினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அவர், கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று மட்டக்களப்பு – ஆரையம்பதிக்கு பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சென்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம வரவேற்றார்.
பிரதமரின் இந்த பயணத்தில் அமைச்சர் வஜிர அபேவர்த்தன, பிரதியமைச்சர் அமீர் அலி, இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன் உள்ளிட்ட பல அரசியல் முக்கியஸ்தர்களும் இணைந்துள்ளனர்.