ஜப்பானை நேற்றையதினம் தாக்கிய ஜாங்டரி புயலால் அந்நாட்டில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நாடு முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மணிக்கு 90 கி.மீ. முதல் 126 கி.மீ. வேகத்தில் கடும் சூறாவளி காற்று வீசியதுடன் பலத்த மழையும் பெய்தது. இதனால் நேற்று இரண்டாவது நாளாக அதிகளவான விமான மற்றும் புகையிரத சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதுடன் புயல், மழை தொடர்பான சம்பவங்களில் அங்கு ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.