இன்றையதினம் சிம்பாப்வேயில் தேர்தல் நடைபெறுகின்ற நிலையில் தனது முன்னாள் நண்பரும் தற்போதைய ஜனாதிபதியுமான எமர்சன் முனங்காக்வாவை ஆதரிக்க போவதில்லை என அந்நாட்டின் முன்னாள ஜனாதிபதி ரொபேர்ட் முகாபே தெரிவித்துள்ளார்.
1980ல் சிம்பாப்வே விடுதலை பெற்றதில் இருந்து 37 ஆண்டுகளாக அந்நாட்டின் ஜனாதிபதியாக இருந்த 93 வயது முகாபே, அண்மையில் துணை ஜனாதிபதி முனங்காக்வேவை பதவியிலிருந்து நீக்கியதுடன் தனக்கு அடுத்தபடியாக அவரது இரண்டாவது மனைவி கிரேஸ் ஆட்சியையும் கட்சியையும் கைப்பற்றுவதற்காகவே அவர் இவ்வாறு செய்ததாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் ராணுவம் தலையிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தது. இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் தங்கியிருந்த முனங்காக்வா நாடு திரும்பியதுடன் தற்காலிக ஜனாதிபதியாகவும் பொறுப்பற்றிருந்தார்.
இந்தநிலையில் இன்றையதினம் அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகின்ற நிலையில், தன்னை துன்புறுத்தியவர்களுக்கு ஆதரவாக தன்னால் வாக்களிக்க முடியாது என முகாபே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது