ஜனாதிபதி தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெறவுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பான செயலணியின் கூட்டத்தில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் “ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெறும் இந்த செயலணியில் 48 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். எனினும் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்த இரண்டு பிரதிநிதிகள் மாத்திரமே இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் மத்திய அரசாங்கத்தையும் பாதுகாப்பு தரப்பினரையுமே பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் நான் ஏற்கனவே இரு கடிதங்கள் மூலம் உரிய தரப்பினருக்கு அறிவித்திருந்தேன். எனினும் அவர்கள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாகவே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.