178
நேற்றையதினம் வெளியிடப்பட்ட ஆண்களுக்கான டென்னிஸ் தரவரிசையில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். டென்னிஸ் தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கான சங்கத்தினால் வெளியிடப்பட்ட இந்த தர வரிசைப்பட்டியலில் நடால் 9310 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.
சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 7080 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஜெர்மனியின் அலெக்சாண்டர் 5665 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், அர்ஜென்டினாவின் மார்ட்டின் டெல் போட்ரோ 5395 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், தென்னாபிரிக்காவின் கெவின் அண்டர்சன் 4655 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.
Spread the love