அண்மையில் நடைபெற்று முடிந்த உலககிண்ண கால்பந்து தொடரில் விமர்சனங்களுக்குள்ளான பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மர் அடிக்கடி களத்தில் விழுவது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்திருந்தன. இந்நிலையில் முதன்முறையாக தன் மீது கூறப்படும் விமர்சனங்களை இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ மூலம் நெய்மர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
:
சில நேரங்களில் மிகைப்படுத்தும் செயலை தான் செய்திருப்பதாக தெரிவித்த அவர் களத்தில் தான் பாதிக்கப்படுவது உண்மையே எனத் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் தோற்று வெளியேறியபோது தான் யாருக்கும் பேட்டி வழங்காமைக்கு காரணம் தான் வெற்றிச் செய்திகளை மட்டுமே விரும்புபவன் எனவும் மற்றவர்களை ஏமாற்றுவதற்கு தான் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தனது கால்பந்து பாணி ஒரு சிறுவனை போன்றது. சில நேரங்களில் இது உலகை வசீகரிக்கும். சில நேரங் களில் அது உலகை எரிச்சல் அடைய வைக்கும். எனக் குள் இருக்கும் சிறுவனை காப்பாற்றுவதற்காக போராடு கிறேன்.
அதிக மாக களத்தில் நான் விழுவதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மை என்னவெனில் நான் விழவில்லை. அறுவை சிகிச்சை செய்த கணுக்காலில் எந்த ஒரு நடவடிக்கையும் மேலும் காயப்படுத்தவே செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.