2.7K
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….
யாழ்.மல்லாகம் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணின் தாலிக்கொடியை மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் அறுத்து சென்றுள்ளனர். மல்லாகம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை வீதியால் குறித்த பெண் நடந்து சென்று கொண்டிருந்த போது , பெண்ணை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் அவரது தாலிக்கொடியை அறுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில், தெல்லிப்பளை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Spread the love