குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த 52 மீனவர்களுக்கு மீன்பிடி வலைத்தொகுதிகள் இன்று செவ்வாய்க்கிழமை (31) வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மீள் குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் நிதியொதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட மீன் பிடி வலைத் தொகுதிகலேமாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் வைத்து 52 மீனவர்களுக்கு வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது.
சுமார் 55 லட்சம் ரூபா பெறுமதியான குறித்த மீன்பிடி வலைத்தொகுதிகள் விடத்தல்தீவு, தேவன்பிட்டி, கள்ளியடி . பாப்பாமோட்டை ஆகிய கிராமங்களை சேர்ந்த வறிய மீனவர்களுக்கு வழங்கப்பட்டது. குறித்த நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் செல்லத்தம்பு மற்றும் பிரதேச சபை உறுப்பினர் கந்தையா சௌந்தர நாயகம், மாந்தை மேற்கு பிரதேச செயலக திட்டப் பணிப்பாளர் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.