238
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் ‘சதொச’விற்பனை நிலைய வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (31) 44ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் நீதவான் ரி.ஜே.பிரபாகரன் மேற்பார்வையில் குறித்த அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது.
விசேட சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஸ தலைமையில் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜசோம தேவாவின் குழுவினரும் இணைந்து அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது வரைக்கும் 60 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதோடு, அடையாளம் காணப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளை மீட்கும் பணி இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love