182
கடந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் தொடர்பான விசாரணைகளின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலையீடுகள் காணப்படுவதாக சமூக நீதிக்கான அமைப்பின் தேசிய அழைப்பாளர் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் போதும் பிரதமரின் தலையீடு காணப்படுவதனால் அவை மந்தகதியில் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் சக்தி அமைப்பினரில் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பேராசிரியர் சரத் விஜேசூரிய மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Spread the love